ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: 9 பாதுகாப்புப்படை வீரர்கள் படுகாயம்
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பாதுகாப்புப்படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பாதுகாப்புப்படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-வில் உள்ள காக்ரியால் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து வருகிறது.
இதில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் சம்பவம் காரணமாக 9 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அப்பகுதி டிஎஸ்பி உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். இருப்பினும் உயிருக்கு ஆபத்தில்லை எனவும், அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஜம்மு ஐஜி தெரிவித்தார்.
Advertisement
Advertisement
முன்னதாக, பாராமுல்லா பகுதியிலும் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.