FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பதற்றமான சூழ்நிலைகளை கையாள காவலர்களுக்கு ரிஜிஜு ஆலோசனை

காவல்துறை அதிகாரிகள் பதற்றமான சூழ்நிலைகளை புரிந்துகொண்டு, அமைதியாகச் செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


காவல்துறை அதிகாரிகள் பதற்றமான சூழ்நிலைகளை புரிந்துகொண்டு, அமைதியாகச் செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் 25-ஆவது ஆண்டு மாநாடு அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ரிஜிஜு பேசியதாவது:
பதற்றமான மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளில் காவல்துறை அதிகாரிகள் அமைதியாகச் செயல்பட வேண்டும். சூழ்நிலைகளை புரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.
பொதுமக்கள் காவல்துறையிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கின்றனர். காவல்துறையினர் கண்ணியத்துடனும், உதவி மனப்பான்மையுடனும் செயல்படும் பட்சத்தில் சுற்றுலா முன்னேற்றதிலும் அவர்கள் நேர்மறையாக பங்களிப்பு செய்ய இயலும் என்று ரிஜிஜு பேசினார்.
அருணாசல பிரதேச முதல்வர் பெமா காண்டு பேசுகையில், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கே, ஒரு மாநிலத்தின் பொருளாதார ரீதியிலான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேவைகளாக உள்ளன. மாநில காவல்துறையினரின் ஒத்துழைப்பின்றி அதனை எட்ட இயலாது. பாதுகாப்பும், வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. 
மத்திய அரசு அளித்த வளர்ச்சி உத்வேகத்தால் வடகிழக்குப் பகுதியில் பாதுகாப்புச் சூழல்கள் குறிப்பிடத்தகுந்த அளவு மேம்பட்டுள்ளன'என்றார்.
இந்த 2 நாள் மாநாட்டின்போது, வடகிழக்கு பிராந்தியத்தில் சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை மேம்படுத்துதல், புதிய சவால்களை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்தல் ஆகியவை தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments