FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ம.பி. மருத்துவக் கல்லூரி திறப்பு விழா விவகாரம்: காங்கிரஸ் எம்.பி.க்கு எதிராக வழக்குப் பதிவு

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் திறந்து வைப்பதாக இருந்த மருத்துவக் கல்லூரியை காங்கிரஸ் எம்.பி.யான காந்திலால் புரியா முன்கூட்டியே

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் திறந்து வைப்பதாக இருந்த மருத்துவக் கல்லூரியை காங்கிரஸ் எம்.பி.யான காந்திலால் புரியா முன்கூட்டியே திறந்ததற்காக அவருக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சரான காந்திலால் புரியா, ரத்லம்-ஜாபவ் மக்களவைத் தொகுதி எம்.பி.யாகப் பதவி வகித்து வருகிறார்.
மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது.
ரத்லம் நகரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை புதன்கிழமை முதல்வர் சௌஹான் திறந்து வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை தனது ஆதரவாளர்களுடன் அந்த மருத்துவக் கல்லூரிக்கு சென்ற காந்திலால் புரியா, ரிப்பன் வெட்டி கல்லூரியை திறந்து வைத்தார்.
அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், செவ்வாய்க்கிழமை மங்களகரமான நாள் என்பதால் இந்தக் கல்லூரியை திறந்து வைத்தேன். இந்தக் கல்லூரியைக் கட்டுவதற்கான திட்டத்துக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்புதல் வழங்கியது' என்றார்.
இதுதொடர்பான தகவல் மாவட்ட நிர்வாகத்துக்கு கிடைத்தவுடன், கல்லூரி வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ரத்லம் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கௌரவ் திவாரி கூறுகையில், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், காந்திலால் புரியா மற்றும் 15 பேருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
முன்னதாக, ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியை முதல்வர் சௌஹான் புதன்கிழமை அதிகாரப்பூர்வகமாக திறந்து வைத்து கூறியதாவது:
இந்தக் கல்லூரி உஜ்ஜைன் பிராந்தியத்துக்கு அளிக்கப்பட்ட பரிசு. கடந்த 1964-ஆம் ஆண்டுக்கு பிறகு மாநிலத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தக் கல்லூரியை அமைக்கலாம் என்று நான் முதல்வரான பிறகு முடிவு செய்யப்பட்டது' என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments