FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து மறு விசாரணை: மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் 

தேசத்தந்தை மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து மறு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய் து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 4 மார்ச் 2019, 7:56 pm IST
பகிர்:

புது தில்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து மறு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய் து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி தான் பங்கேற்ற ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். நாதுராம் விநாயக் கோட்சே என்பவை காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த வழக்கை விசாரித்த தில்லி மாவட்ட நீதிமன்றம் 1949-ம் ஆண்டு நவம்பர் 8 அன்று கோட்சேவுக்கு மரண தண்டணை விதித்தது.

அதேபோல கோட்சேவுக்கு உதவிய நாராயண் ஆப்தே என்பவருக்கு மரணதண்டணை வழங்கப்பட்டது. இந்த இருவரும் அம்பாலா சிறையில் 1949- நவம்பர் 15 -அன்று தூக்கிலிடப்பட்டனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து மறு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் முடிவடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி மும்பையைச் சேர்ந்த பங்கஜ் பத்னீஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் காந்தி கொலை வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும், எனவே இவ்வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிடவேண்டும் என்று கோரி இருந்தார்.

அத்துடன் காந்தியின் உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், கோட்சே மூன்று குண்டுகளை மட்டுமே சுட்டார் என்பதால், அந்த நான்காவது குண்டை சுட்டது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்களன்று அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த கொலை வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான எந்த ஒரு அடிப்படை முகாந்திரத்தையும் நாங்கள் கண்டறிய இயலவில்லை என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments