முகப்பு
இந்தியா

முன்னாள் பத்திரிகையாளரை கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமித்தது காங்கிரஸ்!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளராக முன்னாள் பத்திரிகையாளர் சுப்ரியா ஸ்ரீனேட் என்பவரை நியமித்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 21 செப்டம்பர் 2019, 12:06 pm IST
பகிர்:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளராக முன்னாள் பத்திரிகையாளர் சுப்ரியா ஸ்ரீனேட் என்பவரை நியமித்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரும், மறைந்த உத்தரப் பிரதேச மாநில நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ் வர்தனின் மகள் சுப்ரியா ஸ்ரீனேட் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச ம் மகாராஜ்கஞ்ச்(Maharajganj) தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஸ்ரீனேட் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் அமர்மானி திரிபாதியின் மகள் தனுஸ்ரீ திரிபாதி, மகாராஜ்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அவர் போட்டியிட கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவருக்குப் பதிலாக சுப்ரியா ஸ்ரீனேட் களமிறக்கப்பட்டு தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இருந்த போதிலும், முன்னாள் பத்திரிகையாளர் என்பதை வைத்து அவருக்கு காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments