நாட்டில் புதிதாக 7,145 பேருக்கு கரோனா; 6,096 பேர் மீண்டனர்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,317 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,317 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,317 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,47,58, 481 ஆக உயர்ந்துள்ளது. 318 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,78,325. உயிரிழந்தோர் விகிதம் 1.38 சதவிகிதமாக குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
நேற்று செவ்வாய்க்கிழமை 6,096 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,01,966. குணமடைந்தோர் விகிதம் 98.40 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 78,190 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 575 நாள்களில் மிக குறைந்த எண்ணிக்கை ஆகும். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இதையுடம் படிக்க | ரூ.60,000 சம்பளத்தில் அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
நாடு முழுவதும் இதுவரை 66,73,56,171 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,29,512 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 1,38,95,90,670 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 57,05, 03 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 220 ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களில், தில்லி மற்றும் மகாராஷ்டிரத்தில் முறையே 57 மற்றும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 90 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.