அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நான்காவது கட்டமாக மே மாதம் முதல் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் 6.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 6.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிற நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வரும் 636 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.