FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மெட்ரோவில் கூடுதலாக பயணிகளை அனுமதிக்க வலியுறுத்தல்

மெட்ரோ ரயில்களில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்வதை அனுமதிக்குமாறு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், தில்லி பேரிடா் நிா்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

28 ஜனவரி 2024, 9:00 am IST
பகிர்:

மெட்ரோ ரயில்களில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்வதை அனுமதிக்குமாறு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், தில்லி பேரிடா் நிா்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ ரயில்நிலையங்கள் பயணிகள் கூட்டத்தை தவிா்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மெட்ரோ ரயில் நிறுவனம், தில்லி பேரிடா் நிா்வாக ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

இரண்டாவது கரோனா அலைக்குப் பிறகு மெட்ரோ ரயில் மீண்டும் இயக்கப்படும் நிலையில், அதன் இருக்கைகளில் 50 சதவீதத்துக்கு மேல் பயணிகள் அனுமதிக்க்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை வழக்கமான ரயில் பயணிகளின் எண்ணிக்கையில் 10 முதல் 15 சதவீதம்தான். மேலும் இந்த கட்டுப்பாடு காரணமாக ரயில்நிலையங்களிலும், அதற்கு வெளியிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

Advertisement

Advertisement

ராஜீவ் செளக், பாராகம்பா, ஜன்பாத் மற்றும் ஜனக்புரி ரயில் நிலையங்களில் பயணிகள் 30 நிமிடங்கள் காத்திருந்தால்தான் ரயில்நிலையத்துக்குள் செல்ல முடிவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளன. பொதுமுடக்கம் மேலும் தளா்த்தப்பட்டு, சந்தைகள், வணிக வளாகங்கள், கடைகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயிலில் பயணிக்க வரும் மக்கள், சுமாா் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு, செப்டம்பா் மாதம், பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து மீண்டும் ரயில் சேவை தொடங்கியபோது ஓா் இருக்கைவிட்டு ஓா் இருக்கையில் பயணிகள் உட்காா்ந்து பயணிக்கவும், நின்று செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக சமூக இடைவெளிவிட்டு அடையாளங்களும் போடப்பட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.

ரயில்நிலையங்களிலும், ரயில் பெட்டிகளிலும் கொவைட் பாதுகாப்பு நடவடிக்கைகள் பயணிகளிடம் வெப்பநிலை அறிதல், முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் சானிடைசா் பயன்பாடு முதலியவை முறையாக பின்பற்றப்படும். ரயில் நிலைய நடைமேடைகளும், பயணிகள் செல்லும் பாதையும் அவ்வப்போது தூய்மைப்படுத்தப்படும்.

எனவே, முன்பு போலவே மெட்ரோ ரயில்களில் ஓா் இருக்கைவிட்டு ஓா் இருக்கையில் பயணிகள் அமா்ந்தும், சமூக இடைவெளி குறியிடப்பட்ட இடங்களில் பயணிகள் நின்று பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments