முகப்பு
இந்தியா

மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவி தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

சஃப்தர்ஜங் பகுதியில் உள்ள மருத்துவமனையின் மாணவர்கள் விடுதியில், மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Updated On : 1 செப்டம்பர் 2022, 2:29 pm IST
மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவி தற்கொலை: மன அழுத்தம் காரணமா? (கோப்புப்படம்)
பகிர்:


புது தில்லி: சஃப்தர்ஜங் பகுதியில் உள்ள மருத்துவமனையின் மாணவர்கள் விடுதியில், மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதன்கிழமை நள்ளிரவு 3.30 மணியளவில், மாணவியின் தற்கொலை குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.

தில்லியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரிமாணவி, சஃப்தர்ஜங் மருத்துவமனையின் எம்பிபிஎஸ் பயிலும் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி, அந்த மருத்துவமனையில் இறுதியாண்டுக்கான மருத்துவப் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவர் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அவரது அறை உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. அவரது தோழிகள் அறையை உடைத்துக் கொண்டு உள்ளேச் சென்று அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

அவர் கைப்பட எழுதிய தற்கொலை கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மன அழுத்தத்துக்கான மாத்திரைகளின் காலி கோப்பைகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

அவரது நண்பர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர், பெற்றோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments