FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாற்றி யோசித்ததால்.. விவசாயியாக மாறி சொந்த ஊருக்கு பெருமை சேர்த்த பட்டதாரி

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனத்தில் சேராமல், மாற்றி யோசித்தார்.

1 பிப்ரவரி 2024, 3:47 pm IST
மாற்றி யோசித்ததால்.. விவசாயியாக மாறி சொந்த ஊருக்கு பெருமை சேர்த்த பட்டதாரி
பகிர்:


ஷாஜஹான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனத்தில் சேராமல், மாற்றி யோசித்தார்.

இன்று தனது நிலத்தில் டிராகன் பழங்களை விளைவித்து, மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக மட்டுமல்லாமல், சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குளுகுளு ஏசியில் உட்கார்ந்து கொண்டு காலை ஆட்டிக் கொண்டு பல லட்சம் சம்பாதித்திருக்கலாம் அதுல் மிஷ்ரா. சென்னையில் உள்ள கல்லூரியில் பிடெக் முடித்துவிட்டு, தனது சொந்த ஊருக்குச் சென்று தரிசு நிலத்தை பொன் விளையும் பூமியாக்க திட்டமிட்டார்.

Advertisement

Advertisement

இணையத்தில் துழாவி, டிராகன் பழச் செடிகளை வளர்க்கும் முறைகளைக் கற்றறிந்தார். தனது சொந்த ஊர் விவசாயிகளும் பயனடையும் வகையில் இந்த முயற்சியை அவர் மேற்கொண்டார். விவசாயம் செய்ய முடியாமல் விட்டுப் போன நிலங்களை ஊழுது டிராகன் செடிகளை நட்டார்.

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் மட்டுமே விளையும் இந்த டிராகன் பழம், தற்போது நன்கு விளைந்து ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கிறார்கள்.

மகாராஷ்டிரத்தில் தற்போது அதிகம் விளைவிக்கும் பழமாகவும் உள்ளது. செடியை நட்டு ஓராண்டுக்குப் பிறகுதான் பழம் கிடைக்கிறது. தற்போது கை நிறைய சம்பாதித்து வருகிறார். அக்கம் பக்கத்து நிலத்திலும் இதனை விரிவுபடுத்தும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

விவசாயிகள் பலரும் அதுல் மிஷ்ராவை பாராட்டி வருகிறார்கள். இது பற்றி அவர் கூறுகையில், இந்த டிராகன் பழத்தை யார் வேண்டுமானாலும் விவசாயம் செய்யலாம். ஆனால், அந்த ஓராண்டுக்குத் தேவையான பணம் விவசாயிகளிடம் இருந்தால், இந்த விவசாயத்தை எளிதாக செய்யலாம். இதற்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments