அரசு மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெற இனி ஆதார் எண் கட்டாயம்!
மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுபவர்களுக்கு ஆதார் விதிகளை கடுமையாக்கும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
இதையும் படிக்க | 21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு நாட்டைத் தயார்படுத்தியவர் வாஜ்பாய்: பிரதமர் மோடி புகழாரம்
Advertisement
Advertisement
அந்த சுற்றறிக்கையின்படி, மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களின் கீழ் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்றும், ஆதார் வழங்கப்படாத சூழலில், நிரந்தர ஆதார் அட்டை பெரும்வரை ஆதார் பதிவு செய்த எண்ணைப் பயன்படுத்து சேவைகளைப் பெறலாம். ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டு இல்லையென்றால், அரசாங்க மானியங்கள் மற்றும் பலன்களைப் பெற முடியாது.
நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தற்போது ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.