முதல்முறையாக உச்சநீதிமன்ற வழக்குகள் இன்று நேரடி ஒளிபரப்பு! ஏன் தெரியுமா?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இன்று விசாரிக்கும் வழக்குகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இன்று விசாரிக்கும் வழக்குகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பணிக்காலம் இன்றுடன்(ஆக.26) முடிவடைகிறது. கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் இன்று ஒருநாள், அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலை செய்யப்பட உள்ளன. இன்று காலை 10.30 மணி முதல் https://webcast.gov.in/என்ற அரசு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
Advertisement
Advertisement
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை(ஆக. 27) பொறுப்பேற்கிறார்.
மேலும், உச்சநீதிமன்ற வழக்குகள் முதல்முறையாக நேரலை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.