வெற்றித் தறி விற்பனை நிலையங்கள்: முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார்
தமிழ்நாட்டில் வெற்றித் தறி விற்பனை நிலையங்களை முதல்வர் விஜய் தொடங்கிவைத்திருப்பது பற்றி....
கோ-ஆப்டெக்ஸ் மூலம் தமிழ்நாட்டில் வெற்றித் தறி விற்பனை நிலையங்களை முதல்வர் விஜய் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விற்பனை நிலையங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். 12ஆவது தேசிய கைத்தறி நாளையொட்டி வெற்றித் தறி விற்பனை நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் வேட்டி சட்டை அணிந்து முதல்வர் விஜய் பங்கேற்றார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வர், கலைவாணர் அரங்கம் அருகே கூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தவாறு சென்றார்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் நேரடியாக விற்பனை செய்ய விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் இன்று தேசிய கைத்தறி நாளையொட்டி தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்களுக்கு முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், கைத்தறித் தொழில் மேலும் வளர்ச்சியடைந்து, நமது நெசவாளர்களின் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெருகிடவும், தமிழ்நாட்டின்பாரம்பரிய கைத்தறி இரகங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மேலும் புகழ்பெறவும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
CM Vijay launches Co-optex 'Vetri Thari' outlets in Tamil Nadu on Friday
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.