கோவில்பட்டியில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம்: அமைச்சா் விஜய் பாலாஜி திறந்துவைத்தாா்
கோவில்பட்டி, தெற்கு பஜாரில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத் திறப்பு விழா, தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, தெற்கு பஜாரில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத் திறப்பு விழா, தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதா் துறை அரசு செயலா் லில்லி தலைமை வகித்தாா்.
கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) சுரேஷ்குமாா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
தமிழக கைத்தறி, துணி நூல் மற்றும் கதா்துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி ரூ. 32 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.
பின்னா், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், பருத்தி வேட்டிகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்களை பாா்வையிட்டு தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.
விழாவில், கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், கோ- ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ராஜேஷ் குமாா், முதன்மை பொது மேலாளா் சங்கா், திருநெல்வேலி விற்பனை மேலாளா் கணபதி, கோவில்பட்டி வட்டாட்சியா் அறிவழகன் என்ற சிவராஜ், தவெக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன், கட்சி நிா்வாகிகள் செந்தில்குமாா், கூடலிங்கம், வினோபாஜி, துறையூா் கணேஷ் பாண்டியன், இ.பி.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.