கர்நாடகத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்த தம்பதியை பயணம் செய்ய விடாமல் தடுத்து அட்டூழியம்
கர்நாடகத்தில் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தம்பதியை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காத கொடுமை நடந்துள்ளது.
கர்நாடகத்தில் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தம்பதியை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காத கொடுமை நடந்துள்ளது.
கர்நாடகத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மதம் தொடர்பான சிக்கல் அவ்வப்போது எழுந்து வருகின்றன. இந்துக்கள் அல்லாதவர்களின் பொருள்களை வாங்கக் கூடாது, ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்குள் வரக்கூடாது உள்ளிட்ட பிரச்னைகள் தேசிய அளவில் கவனம் பெற்றன.
இதையும் படிக்க | கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கால்பந்து வீரர் நெய்மர்
Advertisement
Advertisement
இந்நிலையில் தற்போது மாற்று சமூகங்களைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்டதை எதிர்த்து அவர்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதில் மங்களூருவிலிருந்து பெங்களூரு செல்லும் பேருந்தை இடைமறித்து உள்ளே நுழைந்த பஜ்ரங்தள் அமைப்பினர் தம்பதிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | உலகக் கோப்பை: சாதிப்பார்களா சதுரங்கச் சட்டைக்காரர்கள்?
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின் பெண்ணை அவரது குடும்பத்தினருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.