FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பஞ்சாபில் ரயில் விபத்தில் 3 குழந்தைகள் பலி

பஞ்சாபில் ரயில் விபத்தில் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 28 நவம்பர் 2022, 10:40 am IST
பகிர்:

பஞ்சாபில் ரயில் விபத்தில் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலம், கர்தார்பூரில் நேற்று ரயில் விபத்தில் மூன்று குழந்தைகள் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல் அதிகாரி ஜக்ஜித் சிங் கூறுகையில், "ரயில் விபத்தில் 3 குழந்தைகள் இறந்தனர். 

ஒருவர் படுகாயம் அடைந்தார். இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நான்காவது ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் மரங்களில் உள்ள பழங்களை சாப்பிடுவதற்காக இங்கு வந்துள்ளனர். 

Advertisement

Advertisement

அப்போது ரயில் வருவதை அவர்கள் கவனிக்கவில்லை என்றார். ரயில் விபத்தில் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் கர்தார்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments