FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி.யில் மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் இடைநீக்கம்!

உத்தரப் பிரதேசத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத மாணவியை ஆசிரியர் சரமாரியாக அடித்துத் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Updated On : 15 செப்டம்பர் 2022, 11:59 am IST
மகளை பள்ளிக்கு அனுப்பியதால் பெற்றோருக்கு நேர்ந்த துயரம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத மாணவியை ஆசிரியர் சரமாரியாக அடித்துத் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தனியார் பள்ளி ஒன்றில் 5-ஆம் வகுப்பு மாணவி, வீட்டுப்பாடம் முடிக்காததால், கன்னம் மற்றும் கைகளில் பலமுறை சரமாரியாகத் தாக்கியுள்ளார். 

இதனால் பலத்த காயமடைந்த மாணவி, தன்னை ஆசிரியர் சரமாரியாக அடித்துவிட்டதாகப் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

பள்ளிக்கு வந்த மாணவியின் தாயார் கன்னங்கள் வீங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து, சிறுமியின் தாயார் கிருஷ்ணா நகர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். 

பள்ளி நிர்வாகம் ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து, 2 ஆசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments