இந்தியா

அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்ச நீதிமன்றம் கேள்வி

அதிமுக பொதுக்குழு வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

DIN

அதிமுக பொதுக்குழு வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக பொதுக்குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிமுக பொதுக்குழவின் நிகழ்ச்சி நிரலில் பன்னீர் செல்வத்தை நீக்குவது இல்லாதபோது பன்னீர் செல்வத்தை எப்படி நீக்கினீர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்பட விடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் பன்னீர் செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார் என்று அதிமுக தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கட்சியில் எந்த ஆதாரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்று அதிமுக தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT