FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் காவல் நீட்டிப்பு!

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 10 அக்டோபர் 2023, 4:43 pm IST
தில்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை கைது செய்து அழைத்து சென்ற அமலாக்கத் துறையினா்
பகிர்:

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 10 வரை அமலாக்கத்துறை விசாரணைக்கு தில்லி நீதிபதி அனுமதி அளித்தார். 

இதையடுத்து, சஞ்சய் சிங் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டி மேலும் ஐந்து நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது.

இந்த நிலையில், 5 நாள் காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் சிங்கிற்கு, மேலும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க ரோஸ் அவென்யு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments