இந்தியா

தில்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் உள்ள ஆர்.கே.புரத்தில் உள்ள பப்ளிக் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

தில்லியில் உள்ள ஆர்.கே.புரத்தில் உள்ள பப்ளிக் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். வெடிகுண்டு தடுப்புப் பணியாளர்கள் காலை 8 மணியளவில் வளாகத்தில் சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை என கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பள்ளியில் இன்று தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரின் சோதனைக்குப் பிறகு தேர் சுமூகமாக நடந்தாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போலி மின்னஞ்சல் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT