முகப்பு
இந்தியா

மேகாலயா முன்னாள் முதல்வர் காலமானார்

முதுமை காரணமாக மேகாலயா முன்னாள் முதல்வர் சல்செங் மரக் காலமானார்.

Updated On : 16 ஆகஸ்ட் 2024, 4:37 pm IST
சல்செங் மரக்
பகிர்:

முதுமை காரணமாக மேகாலயா முன்னாள் முதல்வர் சல்செங் சி மரக் காலமானார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மேகாலயா முன்னாள் முதல்வருமான சல்செங் சி மரக் முதுமை தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக துராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

1993 ஆம் ஆண்டு ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த மாநிலத்தின் முதல் முதல்வர் சல்செங் மரக் ஆவர்.

மேலும் 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கவிழ்ந்தபோது மிகக் குறுகிய காலம் அதாவது 12 நாட்கள் முதல்வர் பதவியையும் வகித்தார்.

2003-ல் சல்செங் மரக் மாநில காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments