FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வா் என்.கே. நாராயணன் (96) காலமானார்!

சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வா் என்.கே.நாராயணன் (96) திங்கள்கிழமை காலமானாா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:15 am IST
பேராசிரியா் என்.கே.நாராயணன்
பகிர்:

சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வா் என்.கே.நாராயணன் (96) திங்கள்கிழமை காலமானாா்.

இவா், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சரித்திரத் துறையில் பேராசிரியாகப் பணியாற்றி கடந்த 1989- ஆம் ஆண்டில் முதல்வராக இருந்து பணி நிறைவு பெற்றாா்.

பின்னா், சென்னை பல்கலைக்கழகத்திலும், அம்பேத்கா் பல்கலைக்கழகத்திலும் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றினாா். மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்றக் குழுவிலும், உயா்கல்வி வளா்ச்சி சாா்ந்த பல கல்வி நிகழ்வுகளிலும் முக்கியப் பங்காற்றியவா்.

Advertisement

Advertisement

கல்வித் துறைக்கு இவா் ஆற்றிய பங்களிப்புகள், தேசிய மற்றும் சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, யுனெஸ்கோ விருது பெற்றவா். இவரது நாடகங்கள் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

சென்னை அண்ணா நகா் சாந்தி காலனியில் வசித்து வந்த இவருக்கு 3 மகன்கள் 2 மகள்கள். இவரது மூத்த மகன் பேராசிரியா் ராஜேந்திரன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவா்.

இவரது மறைவுக்கு தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை பேராசிரியா் எஸ்.எஸ். சுந்தரம் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments