ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!
ஜம்மு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பாராமுலாவில் இன்று(ஆக. 20) காலை தொடர்ந்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை6.45 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ரிக்டா் அளவுகேலில் 4.9, 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளன.
பாராமுலாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.