FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிபிஐ விசாரணையில் நம்பிக்கை உள்ளது: கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர்

சிபிஐ விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று கொல்கத்தா பெண் மருத்துவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Updated On : 23 ஆகஸ்ட் 2024, 10:25 pm IST
மருத்துவர்கள் போராட்டம் | பாட்னா; படம் | பிடிஐ
பகிர்:

சிபிஐ விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று கொல்கத்தா பெண் மருத்துவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதல்வராகப் பணியாற்றிய சந்தீப் கோஷ், அந்த சம்பவம் நடைபெற்ற 2 நாள்களுக்குப் பிறகு முதல்வா் பொறுப்பை ராஜிநாமா செய்தாா்.

Advertisement

Advertisement

இவ்வழக்கில் கைதான சஞ்சய் ராவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து சீல்டா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர் சிபிஐயின் மேற்பார்வையின் கீழ் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிஐ விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த வழக்கில் கொல்கத்தா காவல்துறை எங்களை தவறாக வழிநடத்த முயன்றது.

ஆரம்பத்திலிருந்தே, (மாநில) நிர்வாகமும் காவல்துறையும் யாரோ ஒருவரைப் பாதுகாக்க முயற்சிப்பதாக நாங்கள் உணர்ந்தோம், இதுபோன்ற குற்றத்தில் ஒருவர் ஈடுபட முடியாது என்பதால் எதையாவது மறைக்க முயற்சிக்கிறார்கள். சிபிஐ விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வழக்கு விசாரணைக்காக, ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ், 8வது நாளாக இன்றும் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments