FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்

தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

5 December 2024, 3:02 am IST
பகிர்:

நமது நிருபர்

தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை இணை அமைச்சர் நிமுபென் பம்பனியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடும்ப அட்டைகளை வழங்க இ-கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் மின்னணு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு இடங்களுக்கு குடியேறி வந்த உண்மையான குடும்ப அட்டைதாரர்கள் தகுதியானவர்களாக இருந்தபோதும் சரிபார்ப்புக்கு வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு அறிந்துள்ளதா என மக்களவையில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

Advertisement

Advertisement

இதற்கு அமைச்சர் நிமுபென் பம்பனியா அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், "இ-கேஒய்சி நடைமுறை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதை செய்யாததால் எந்தவொரு குடும்ப அட்டையும் ரத்து செய்யப்படாது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொதுவிநியோக கட்டுப்பாடு ஆணைப்படி, குடும்ப அட்டைதாரர்கள், பயனாளிகள் பட்டியல், தகுதிவாய்ந்தவர்கள், தகுதியற்றோர், போலி அட்டைகள் போன்ற விவரங்களைச் சரிபார்ப்பது மாநிலங்களின் பொறுப்பு.

கள ஆய்வு உள்ளிட்ட சரிபார்ப்பு நடைமுறைகளை மேற்கொண்டு, தகுதிவாய்ந்தவர்களை கண்டறியவும் உண்மையான பயனாளிகள் பட்டியலில் இருந்து இடைநீக்கமோ, நீக்கமோ செய்யப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றார்' அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments