FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராகுலுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர். அல்ல; அம்பேத்கருக்கு எதிரானது! காங்கிரஸ்

ராகுல் காந்தி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம்...

Updated On : 20 டிசம்பர் 2024, 12:11 pm IST
ராகுல் காந்தி - ANI
பகிர்:

பாஜக புகாரின் பேரின் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையானது ராகுல் காந்திக்கு எதிரானது அல்ல, அம்பேத்கருக்கு எதிரானது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி தள்ளிவிட்டதால், பாஜகவின் இரண்டு எம்பிக்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் தரப்பிலும் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை பாஜக எம்பிக்கள் மறித்து தள்ளியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே, பாஜக அளித்த புகாரைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது நாடாளுமன்ற காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

“உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன கூறினாலும் தில்லி போலீஸ் செய்வார்கள். மகர் திவாரில் நேற்று நடைபெற்றது அனைத்தும் திட்டமிட்ட செயல்.

அம்பேத்கரை அமித் ஷா அவமதித்தார், அவரை மன்னிப்பு கேட்க நாங்கள் வலியுறுத்தினோம், அதனை திசை திருப்பும் நோக்கில் இதனைத் திட்டமிட்டு செய்துள்ளனர்.

இந்த எஃப்ஐஆர் ராகுல் காந்திக்கு எதிரானது அல்ல, அம்பேத்கருக்கு எதிரானது” என்றார்.

அதேபோல், காங்கிரஸ் எம்பி சந்தோஷ் குமார் கூறியதாவது:

“இது பொய் வழக்கு, நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம், பாஜக எம்பிக்கள் எங்களை வழிமறித்து, என்னையும் மற்ற எம்பிக்களையும் தள்ளிவிட்டார்கள். நான் கீழே விழுந்தேன், எனக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

எரிந்து கொண்டிருக்கும் அம்பேத்கர் விவகாரத்தை திசைத்திருப்ப பாஜக புதிய யுக்தியை கையாண்டது. இது பொய்யான வழக்கு, பொதுத் தளத்தில் அனைத்து விடியோக்களும் உள்ளது. சிசிடிவி காட்சிகளும் உள்ளது. ஏன் பொதுத் தளத்தில் வெளியிடாமல் உள்ளீர்கள்? மக்கள் உண்மையை தெரிந்து கொள்ளட்டும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments