FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

க்யூட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) வெளியிடப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜூலை 2024, 8:02 pm IST
பகிர்:

நீட் மற்றும் நெட் தோ்வு முறைகேடு சா்ச்சையைத் தொடா்ந்து, ‘க்யூட்’ தோ்வு முடிவுகள் வெளியாவது தாமதமான நிலையில், க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற என்டிஏ சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ‘க்யூட்’ நடத்தப்படுகிறது. நிகழாண்டு க்யூட் தோ்வு கடந்த மே 15 முதல் 24-ஆம் தேதி வரை முதன் முறையாக நேரடி எழுத்துத் தோ்வு முறை மற்றும் கணினி அடிப்படையில் என இரண்டு முறைகளில் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இத் தோ்வை எழுதினா்.

இதனிடையே, நியாயமான காரணங்களால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி மறுதோ்வை என்டிஏ நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments