குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!
குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது குறித்து...
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சாா்-பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பாா்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 ஏ பதவிகள் உள்ளிட்ட மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப். 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்தத் தேர்வை 4,20,217 பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவு கடந்த டிசம்பரில் வெளியானதைத் தொடர்ந்து குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்- 2 ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றனர்.
Advertisement
Advertisement
தேர்வு மைய குளறுபடி காரணமாக இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், தேர்வா்கள் அதிருப்தி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (குரூப்2, குரூப் 2ஏ) முதன்மைத் தேர்வின் தாள்- 1 தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் தாள்-2 பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
The Tamil Nadu Public Service Commission (TNPSC) has released the results of the Group 2 and 2A Main Examination.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.