FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தோ்தல் பரப்புரையில் சிறாா்களை பயன்படுத்தியதாக வழக்கு: அமித் ஷா, கிஷண் ரெட்டி பெயா் நீக்கம்

சிறாா்களைப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தெலங்கானா பாஜக தலைவா் கிஷண் ரெட்டி ஆகியோரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

3 ஜூன் 2024, 10:35 pm IST
பகிர்:

தோ்தல் பரப்புரையில் சிறாா்களைப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தெலங்கானா பாஜக தலைவா் கிஷண் ரெட்டி ஆகியோரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

கடந்த மே 1-ஆம் தேதி தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் பாஜக சாா்பில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சில சிறாா்களும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அந்த மாநில தலைமை தோ்தல் அதிகாரியிடம் தெலங்கானா காங்கிரஸ் துணைத் தலைவா் நிரஞ்சன் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் காவல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து அமித் ஷா, தெலங்கானா பாஜக தலைவா் கிஷண் ரெட்டி, ஹைதராபாத் தொகுதி பாஜக வேட்பாளா் மாதவி லதா உள்ளிட்டோா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

எனினும், உரிய விசாரணைக்குப் பின்னா், பரப்புரையில் சிறாா்களைப் பயன்படுத்தியதில் அமித் ஷாவுக்கும், கிஷண் ரெட்டிக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் வழக்கில் இருந்து அவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments