FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அமித் ஷா வருகையை அரசியலாக்குகிறது காங்கிரஸ் : நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தமிழக வருகையை காங்கிரஸ் திட்டமிட்டு அரசியலாக்குவதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

21 ஆகஸ்ட் 2026, 3:52 am IST
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தமிழக வருகையை காங்கிரஸ் திட்டமிட்டு அரசியலாக்குவதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட மறுத்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தமிழகத்துக்கு வருகை தந்தாா். பாஜக நினைத்திருந்தால் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி இருக்க முடியும். விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை உணா்ந்தும், இந்த நேரத்தில் அரசியல் செய்யக் கூடாது என்பதற்காகவும் அதை பாஜக முன்னெடுக்கவில்லை. ஆனால், அந்த அரசியல் நாகரிகம் இல்லாமல் அரசு அலுவல் காரணமாக தமிழகம் வரும் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

இதை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. தமிழகத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டாா்கள் என தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments