FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எடியூரப்பா மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை

சிஐடி விசாரணைக்கு ஆஜராகாத எடியூரப்பாவுக்கு இடைக்கால தடை

Updated On : 14 ஜூன் 2024, 6:25 pm IST
எடியூரப்பா
பகிர்:

போக்சோ வழக்கில் எடியூரப்பா எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரன்ட்டுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பெங்களூரு, சதாசிவ நகா் காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வா் எடியூரப்பா மீது பெண் ஒருவா் பாலியல் புகாா் அளித்திருந்தாா். அதில், முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் பிப். 2 ஆம் தேதி சந்தித்தபோது தனது 17 வயது மகளை அவா் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தாா். அதன்பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டப் பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 354 ஏ இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தற்போது இந்த வழக்கை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரித்து வருகிறது. எடியூரப்பாவுக்கு எதிராக புகாா் அளித்த பெண் கடந்த மாதம் கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தாா். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரா், எடியூரப்பாவை கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். இதற்கிடையே இந்த வழக்கு தொடா்பாக ஜூன் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு சிஐடி நோட்டீஸ் அனுப்பியது.

Advertisement

Advertisement

ஆனால், எடியூரப்பா, தான் தில்லியில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும், பெங்களூரு திரும்பியதும் ஜூன் 17 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாகவும் சிஐடிக்கு கடிதம் அனுப்பினாா். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாத எடியூரப்பாவைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்குமாறு பெங்களூரு, முதலாம் விரைவு நீதிமன்றத்தை சிஐடி வியாழக்கிழமை அணுகியது. இதை ஏற்ற நீதிமன்றம், எடியூரப்பாவை கைது செய்வதற்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத வியாழக்கிழமை வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இதனிடையே இந்த வழக்கில் எடியூரப்பா எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரன்ட்டுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. அதில், ஜூன் 17ம் தேதி வரை எடியூரப்பாவை கைது செய்து தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்று ஜூன் 17ஆம் தேதி சிஐடி போலீஸார் முன்பு ஆஜராக நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments