முகப்பு
இந்தியா

விபத்து நடந்த இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே அமைச்சர்!

மேற்கு வங்க ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு!

Updated On : 17 ஜூன் 2024, 11:22 pm IST
- படம் | ஏஎன்ஐ
பகிர்:

ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு நேரில் சென்று அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

- படம் | ஏஎன்ஐ

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே இன்று(ஜூன் 17) காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

47 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு குழந்தை உள்பட 4 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே விபத்து நிகழ்ந்த ரங்கபானி பகுதிக்கு இருசச்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்தபடி சென்ற அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் அங்கு விபத்து குறித்து ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “மீட்பு பணிகளில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இது அரசியல் செய்வதற்கான நேரமல்ல” என்று தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமும், காயமடைந்து சிகிச்சையில் உள்ளோருக்கு ரூ. 2.50 லட்சமும், சிறிய அளவிலான காயமுற்றோருக்கு ரூ. 50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சிலிகுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

- படம் | ஏஎன்ஐ
- படம் | ஏஎன்ஐ

இதனிடையே, சம்பவ இடத்தில் ரயில் பாதையில் தடம் புரண்ட பெட்டிகளை மாற்றிவிட்டு ரயில் போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. விபத்துக்குளான கஞ்சன்ஜங்கா விரைவு ரயில், மீதமுள்ள பெட்டிகளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மால்டா ரயில் நிலையம் சென்றடைந்துள்ளதாக ஆதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.