முகப்பு
இந்தியா

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

உலகளவில் காற்று மாசுபாடு அடைந்த நகரங்களில் புதுதில்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

Updated On : 19 மார்ச் 2024, 8:53 am IST
பகிர்:

உலகளவில் காற்று மாசுபாடு அடைந்த நகரங்களில் புதுதில்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

புதுதில்லிக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு இப்பட்டியலில் 3-ஆம் இடம் வகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, கடந்த ஆண்டில் உலகளவில் காற்றின் தரம் மோசமாக பதிவாகியுள்ள நாடுகளில் இந்தியா 3-ஆம் இடம் வகிக்கிறது.

Advertisement

Advertisement

மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு மட்டுமன்றி சர்க்கரைநோய் போன்ற பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காற்று மாசுபாட்டால் உலகளவில் மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், சராசரியாக உலகில் பல்வேறு காரணங்களால் உயிரிழப்போரில் 9 பேரில் ஒருவர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பை சந்திக்க நேருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, உலகில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக பிகார் மாநிலத்தின் பெகுசாராய் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.