கேஜரிவால் கைது: பிஆர்எஸ் தலைவர் கே டி ராமாராவ் கண்டனம்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு பிஆர்எஸ் செயல் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனுமான கே டி ராமாராவ் கண்டனம்
ஹைதராபாத்: கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு பிஆர்எஸ் செயல் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனுமான கே டி ராமாராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத் துறையின் இத்தகைய அடக்குமுறைகள் வன்மையான கண்டத்துக்குறியது.
அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜகவின் கைகளில் "அடக்குமுறையின் முக்கிய கருவிகளாக" மாறிவிட்டன என்று ராமாராவ் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
பாஜக அரசியல் எதிரிகள் ஆதாரமற்ற காரணங்களால் குறிவைக்கப்படுகிறார்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல் மட்டுமே அவர்களின் ஒரே நோக்கம்" என்று ராமாராவ் தெரிவித்துள்ளார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், ராமா ராவின் சகோதரியான பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதா, அமலாக்கத் துறையினா் ஹைதராபாதில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இந்த நிலையில், தில்லி கலால் கொள்கையில் நடந்த மோசடியில் குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் பிஆர்எஸ் எம்எல்சி
கவிதாவுக்கு பிணை வழங்க வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.