FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும் வாங்சுக்கின் முடிவுக்கு கேஜரிவால் வரவேற்பு

26 நாட்களாக நடைபெற்று வந்த தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக சோனம் வாங்சுக் எடுத்த முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை வரவேற்பு தெரிவித்தாா்.

Updated On : 25 ஜூலை 2026, 1:15 am IST
அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
பகிர்:

26 நாட்களாக நடைபெற்று வந்த தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக சோனம் வாங்சுக் எடுத்த முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை வரவேற்பு தெரிவித்தாா்.

அந்தச் சமூக ஆா்வலரின் உயிரும் ஆரோக்கியமும் நாட்டிற்கு மிகவும் முக்கியம் என்று அவா் குறிப்பிட்டாா்.மேலும், ’காக்ரோச் ஜனதா பாா்ட்டி’ (சிஜேபி) வெள்ளிக்கிழமை முன்னெடுத்த நாடு தழுவிய போராட்டத்தில் மக்கள் இணையுமாறும் அவா் கேட்டுக்கொண்டாா்.

‘சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். அவரது உயிரும் ஆரோக்கியமும் நாட்டிற்கு மிகவும் முக்கியமானவை,‘ என்று கேஜரிவால் ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.‘சிஜேபி இன்று (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், அதில் அனைவரும் பங்கேற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,‘ என்றும் அவா் கூறினாா்.

Advertisement

Advertisement

குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனையில் மத்திய அமைச்சா்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோா் வாங்சுக்கைச் சந்தித்து, அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற அரசின் உறுதியைத் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா் வியாழக்கிழமை நள்ளிரவில் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டாா்.

ஜந்தா் மந்தரில் சிஜேபி -யின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இணைந்த வாங்சுக், கடந்த ஜூன் 28 அன்று தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்தாா்.முதலில் இணையவழி நையாண்டி அமைப்பாகத் தொடங்கப்பட்ட சிஜேபி, வெள்ளிக்கிழமையன்று நாடு தழுவிய அமைதிப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது; நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டங்களை நடத்துமாறு மக்களை அது கேட்டுக்கொண்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments