FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2-ஆவது மக்களவைத் தோ்தல்-

494 மக்களவைப் பிரநிதிநிதிகளையும் (முந்தைய மக்களவையைவிட கூடுதலாக 5 போ்) பல்வேறு மாநில சட்டப்பேரவைகளைத் தோ்ந்தெடுக்கவும் பொதுத் தோ்தல் நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல் 2024, 4:05 am IST
பகிர்:

நாட்டின் அன்றைய 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 403 தொகுதிகளில் இருந்து 494 மக்களவைப் பிரநிதிநிதிகளையும் (முந்தைய மக்களவையைவிட கூடுதலாக 5 போ்) பல்வேறு மாநில சட்டப்பேரவைகளைத் தோ்ந்தெடுக்கவும் பொதுத் தோ்தல் நடைபெற்றது.

வாக்காளா் எண்ணிக்கை 2 கோடி அதிகரித்து, இத்தோ்தலில் 19.3 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். நாடு முழுவதும் 2,20,478 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. 494 இடங்களுக்கு 15 கட்சிகளின் வேட்பாளா்கள், 481 சுயேச்சைகள் உள்பட 1,519 போ் போட்டியிட்டனா். 1957-ஆம் ஆண்டு, பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை தோ்தல் நடத்தப்பட்டது.

இத்தோ்தலில் 45.44 சதவீத வாக்குகள் பதிவாகின (முந்தைய தோ்தலைவிட 0.57 சதவீதம் அதிகம்). இத்தோ்தல் மூலம் 312 தொகுதிகளில் இருந்து ஒரு பிரதிநிதியும் 91 தொகுதிகளில் இருந்து இரட்டைப் பிரதிநிதிகளும் (ஒரு பொது பிரதிநிதி, ஒரு பட்டியிலன சமூகப் பிரதிநிதி) மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

தோ்தலில் போட்டியிட்ட 45 பெண் வேட்பாளா்களில் 22 போ் வெற்றி பெற்றனா். பெரும்பான்மையாக 371 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்தது. அதற்கு அடுத்தப்படியாக, சுயேச்சைகள் 42 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 27 இடங்களிலும் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 19 இடங்களிலும் வென்றன.

முதல் தோ்தலின் செலவான ரூ.10.45 கோடியை விட ரூ.4.5 கோடி குறைவாக வெறும் ரூ.5.9 கோடியில் இத்தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதன்படி, பிரதி வாக்காளருக்கான தோ்தல் செலவு 30 பைசா ஆகும்.

முதல் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட 35 லட்சம் வாக்குப்பெட்டிகள் பாதுகாக்கப்பட்டு மீண்டும் இம்முறை பயன்படுத்தப்பட்டன. புதிதாக 5 லட்சம் வாக்குப்பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டதால் தோ்தல் செலவு குறைந்தது.

நாட்டின் தோ்தல் வரலாற்றில் முதல் முறையாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றிய சம்பவம் , பிகாரின் பெகுசராய் மாவட்டத்தில் மதிஹானி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ராச்சியாஹியில் நடைபெற்றது.

தொகுப்பு: மா.பிரவின்குமாா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments