முகப்பு
இந்தியா

ஜூன் 4க்குப் பிறகு மோடிக்கு ஓய்வுதான் என சொல்பவர்களிடம் என்ன எதிர்பார்ப்பது? மோடி சூசகம்

ஜூன் 4க்குப் பிறகு மோடிக்கு ஓய்வுதான் என்று சொல்பவர்களிடம் என்ன எதிர்பார்ப்பது? மோடி சூசகம்

Updated On : 21 மே 2024, 12:05 pm IST
பகிர்:

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிகாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு பிரதமர் மோடிக்கு படுக்கையில் ஓய்வுதான் என்று சொல்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

பிகார் மாநிலம் மொடிஹாரி பகுதியில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 21ஆம் நூற்றாண்டின் இந்தியா, 'இந்திய' கூட்டணிக் கட்சிகளின் பாவங்களுடன் முன்னேறிச் செல்ல முடியாது.

இந்த தேர்தலுடன், ஒட்டுமொத்த இந்திய கூட்டணிக் கட்சிகளையும் மக்கள் எவ்வாறு வழியனுப்பிவைக்கப் போகிறார்கள் என்பதை முழு உலகமும் பார்க்கப்போகிறது.

Advertisement

Advertisement

மகாத்மா காந்தியின் கொள்கைகளை காங்கிரஸ் எப்போதோ மறந்துவிட்டது, ஒரே ஒரு குடும்பத்தின் நலனைக்காக்க, இந்திய நாட்டின் 60 ஆண்டுகாலத்தையும் வீணாக்கிவிட்டது. இங்கே இந்திய மக்கள் பட்டினியில் வாடிய போது, அவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்குகளை தொடங்கினர் என்று மோடி பேசியுள்ளார்.

மேலும், ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு மோடிக்கு படுக்கையில் ஓய்வுதான் என்று சொல்கிறார்கள். அவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தினர் பேசியதை சூசகமாகக் குறிப்பிட்டு பேசினார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.