நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்!
நடிகர் சல்மான் கானைத் தொடர்ந்து நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சல்மான் கானைத் தொடர்ந்து நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிரட்டல் விடுத்தவர் மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதிரடியாக குறைந்த தங்கம் விலை: எவ்வளவு குறைந்தது தெரியுமா?
இதன் தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு நேற்று(வியாழக்கிழமை) கொலை மிரட்டல் வந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ரூ. 50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மும்பை பந்த்ரா காவல்துறையினர் 308(4), 351(3)(4) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து அந்த அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.