மாதிரிப் படம் 
இந்தியா

வீட்டிற்கு தாமதமாக வந்ததால் மகனை அடித்துக் கொன்ற தந்தை!

தாய் அளித்த புகாரின் பேரில் தலைமறைவான தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

DIN

தெலங்கானாவில் வீட்டிற்கு தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த தந்தை, மகனை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவான தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்திற்குட்பட்ட சோட்டுப்பல் கிராமத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் வீட்டில் குடிபோதையில் இருந்துள்ளார்.

பள்ளியில் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த 14 வயது மகனிடம், தாமதமாக வந்ததற்கான காரணத்தைக் கேட்டு தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் மகனின் மார்பு மீது அவர் அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த மகன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் தாய் கொடுத்த புகாரின் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தந்தையைத் தேடி வருகின்றனர்.

பெற்ற மகனை குடிபோதையில் இருந்த தந்தை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் விபத்து: ஐயப்பப் பக்தா் உயிரிழப்பு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

புத்தொளி... ஸ்ரீலீலா!

சாலை பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT