FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிபிஎஸ்சி பள்ளி தொடங்க மாநில அரசு அனுமதி தேவையில்லை!

சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Updated On : 21 பிப்ரவரி 2025, 10:16 pm IST
பகிர்:

சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநில அரசின் அனுமதியில்லாமல், சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என்றும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு நவ.29 இல் இணைப்புக்குழு அளித்த பரிந்துரைகளுக்கு டிச.26 இல் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்ததிருந்தது. முன்பு சிபிஎஸ்சி பள்ளி தொடங்குவதற்கு மாநில அரசின் தடையின்மைச் சான்று தேவை என்ற நிலையில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபனை உள்ளதா? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments