முகப்பு
இந்தியா

சரக்குக் கப்பலில் 2-வது நாளாக எரியும் தீ! அணைக்கப் போராடும் கடற்படை வீரர்கள்!

சரக்குக் கப்பலில் 2-வது நாளாக எரியும் தீ பற்றி..

Updated On : 10 ஜூன் 2025, 11:25 am IST
சரக்குக் கப்பலில் 2-வது நாளாக எரியும் தீ
பகிர்:

கேரள கடற்கரையில் சிங்கப்பூா் நாட்டு கொடி பொருத்திய சரக்கு கப்பலில் தொடர்ந்து எரிந்துவரும் தீயை அணைக்க முடியாமல் இந்திய கடற்படை வீரர்கள் போராடி வருகின்றனர்.

கொழும்புவில் இருந்து மும்பை துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த சிங்கப்பூா் கொடி பொருத்திய எம்.வி. வான் ஹை 503 என்ற சரக்கு கப்பலில், திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் கேரள கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

கப்பலில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள சம்பவ இடத்துக்கு ஐஎன்எஸ் சூரத் வரவழைக்கப்பட்டது. மேலும், கடற்படை விமான தளத்தில் இருந்து டா்னியா் விமானம் ஒன்றையும் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டது.

Advertisement

Advertisement

கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணிகளில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினா் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் எளிதில் பற்றி எரியக்கூடிய திரவங்கள், திடப் பொருள்கள் மற்றும் நச்சுத்தன்மைமிக்க ஆபத்தான சரக்குகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கப்பலில் தீப்பற்றி 24 மணிநேரத்தை கடந்துள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் கடலோரப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கப்பலின் கண்டெயினர் பகுதியில் தீ தொடர்ந்து எரிந்து வருவதாகவும் வெடிப்புகள் இருப்பதாகவும் இந்திய கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகப்புப் பக்கத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் புகைமூட்டத்துடன் காணக்கப்படுவதாகவும் தீயை அணைக்கும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.