பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!
பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது..
பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பு விடுத்ததன்பேரில் அந்நாட்டின் 57-ஆவது தேசிய நாளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள்கள் அரசுமுறை பயணமாக இன்று(மார்ச் 11) காலை மோரீஷஸ் சென்றடைந்தார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தேசமான மோரீஷஸில் இந்தியா அளித்துள்ள நிதியுதவி மூலம் அமைக்கப்படவுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!
மோரீஷஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோரைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பரிசளித்தார்.
முதல் முறையாக மோரீஷஸ் சென்ற பிரதமர் மோடிக்கு இந்தியப் பெருங்கடலின் ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி கிராண்ட் கமாண்டர் ஆகிய நாட்டின் உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பிரதமர் மோடி பெறவிருகிறார். மேலும், இது பிரதமர் மோடி பெறும் 21 வது சர்வதேச விருது இதுவாகும்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது: பாக். முன்னாள் கேப்டன்