முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டது குறித்து...

Updated On : 13 நவம்பர் 2025, 10:18 pm IST
கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரமுல்லா மாவட்டத்தின் சோஃபோர் பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும் மாநில காவல் துறையினர் வழக்கமான பாதுகாப்புப் பணியில் இன்று (நவ. 13) ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 2 கையெறி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டவர்களை பாதுகாப்புப் படையினர் ஹைபிரிட் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிடுகின்றனர்.

இவர்கள், சாதாரன மக்களைபோல் அங்கு வசித்து வருவார்கள் எனவும், பயங்கரவாதத் தலைவர்களிடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் தாக்குதல்களில் ஈடுபடுவார்கள் எனவும் ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: குடியரசுத் தலைவர் பயணத்தில்..! இந்தியாவுக்கு 8 சிவிங்கிப்புலிகளை பரிசளித்த போட்ஸ்வானா!

summary

Two terrorists have been arrested by security forces in Jammu and Kashmir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.