ஈரானில் இருந்து மேலும் 312 இந்திய மீனவர்கள் மீட்பு! - மத்திய அரசு அறிவிப்பு!
ஈரானில் இருந்து மேலும் 312 இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டது குறித்து...
ஈரான் நாட்டில் சிக்கியிருந்த மேலும் 312 இந்திய மீனவர்களை மீட்க உதவிய ஆர்மீனியா அரசுக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களால், வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின. இதனால், பல்வேறு நாடுகளின் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளின் வழியாகவும், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வழியாகவும் தாயகம் திரும்பினர்.
Advertisement
இந்த நிலையில், ஈரானில் சிக்கியிருந்த மேலும் 312 இந்திய மீனவர்கள் ஆர்மீனியா வழியாகப் பத்திரமாக மீட்கப்பட்டதாக, சனிக்கிழமை (ஏப். 11) அன்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவிய ஆர்மீனியா அரசுக்கும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அராரத் மிர்சோயனுக்கும் மத்திய அரசின் சார்பில் அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ஈரானில் சிக்கியிருந்த 345 இந்திய மீனவர்கள் ஆர்மீனியா வழியாக மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
முன்னதாக, ஈரானில் இருந்து 1,200-க்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாகத் தாயகம் திரும்பியுள்ளதாகவும்; அதில், 996 பேர் ஆர்மீனியா வழியாக மீட்கப்பட்டதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Union External Affairs Minister Jaishankar has expressed his gratitude to the Government of Armenia for assisting in the rescue of another 312 Indian fishermen stranded in Iran.