மேற்கு வங்கம்: மழையிலும் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
மேற்கு வங்கத்தில் மழையிலும் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்...
மேற்குவங்கத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையிலும் மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று(ஏப். 29) 142 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு இன்றுதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
முன்னெப்போதும் இல்லாத அளவில் முதல்கட்டத் தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இரண்டாம் கட்டத் தேர்தலில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, 39.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மேற்குவங்கத்தில் கொல்கத்தா, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மழையிலும், மக்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கின்றனர். சுவேந்து
Amid rain, voting is underway for the second and final phase of the west bengal assembly elections
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.