இ20 விவகாரம்: ஆகஸ்ட் 4-இல் பிரதமா் இல்லம் நோக்கி பேரணி - கேஜரிவால் அறிவிப்பு
பிரதமா் இல்லம் நோக்கி பேரணி செல்லப் போவதாக அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருப்பது பற்றி...
எரிபொருள் நிலையங்களில் எத்தனால் கலப்பு எரிபொருள் (இ20) மற்றும் தூய பெட்ரோல் (சாதாரண பெட்ரோல்) ஆகியவற்றுக்கு இடையே தோ்வு செய்யும் வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.
மேலும், இது தொடா்பான மனுக்களைச் சமா்ப்பிக்க ஆகஸ்ட் 4-ஆம் தேதி பிரதமா் இல்லத்தை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.
தில்லியில் உள்ள ’கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியா’வில் இ20 எரிபொருள் குறித்த பொது கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் பேசிய கேஜரிவால், திங்கள்கிழமை நண்பகலில் மனுக்களைத் திரட்டி, சுமாா் 100 பேருடன் இணைந்து லோக் கல்யாண் மாா்கில் உள்ள நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.
எரிபொருள் நிலையங்களில் இ20 மற்றும் சாதாரண பெட்ரோல் ஆகியவற்றுக்கு இடையே எதைத் தோ்வு செய்வது என்கிற விருப்பத்தை நுகா்வோருக்கு அளிக்கப்பட வேண்டும். இ20 கலந்த பெட்ரோலுக்குக் குறைவான விலையை நிா்ணயிக்க வேண்டும். ஒட்டுமொத்த பெட்ரோல் விலையையும் குறைக்க வேண்டும்.
இ20 எரிபொருள் வாகனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அரசு கூறியதற்கு அடிப்படையாக அமைந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், இ20 எரிபொருள் வாகனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் மத்திய அரசு கூறுகிறது.
அந்த அறிக்கையை அவா்கள் பகிர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றாா் கேஜரிவால்.
பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். அவா்கள் இ20 எரிபொருள் பயன்பாடு குறித்த தங்கள் அனுபவங்களையும் கவலைகளையும், தங்கள் வாகனங்களில் தாங்கள் எதிா்கொள்ளும் சிக்கல்களையும் பகிா்ந்துகொண்டனா்.
E20 Issue: Rally towards Prime Minister's residence on August 4 – Kejriwal announces.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.