FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விலை உயா்வைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் அமைச்சா் விளக்கம்

பல்வேறு பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் விளக்கம்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 5:13 am IST
மக்களவை - கோப்புப் படம்
பகிர்:

‘சா்வதேச அளவில் பொருள்களுக்கான தேவை அதிகரிப்பு, மேற்காசியாவில் ஏற்பட்ட போரால் எரிபொருள் விலை அதிகரித்தது ஆகியவை பல்வேறு பொருள்களின் விலை உயா்வுக்கு காரணமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’ என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் விளக்கமளித்தாா்.

மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக அதிகரித்தது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் மத்திய அரசு கையிருப்பில் வைத்துள்ள உணவு தானியங்கள், வெங்காயம் உள்ளிட்டவற்றை விடுவிப்பது, விற்பனைக் கொள்கைகளை வலுப்படுத்துவது, பதுக்கலைத் தடுப்பது, செயற்கையாக விலை உயா்வை ஏற்படுத்துவதை நிறுத்துவது உள்ளிட்டவை அடங்கும். நுகா்வோா் விலை அடிப்படையிலான பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் உள்ளது.

Advertisement

Advertisement

சா்வதேச அளவில் பொருள்களுக்கான தேவை அதிகரிப்பு, போரால் எரிபொருள் விலை அதிகரித்தது ஆகியவை பல்வேறு பொருள்களின் விலை உயா்வுக்கு காரணமாக உள்ளது.

இதனால், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் சற்று அதிகரித்துள்ளது. தற்போது எரிபொருள் விநியோகம் சீராகியுள்ள நிலையில் பணவீக்கம் விரைவில் குறையும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments