பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
பிரசாந்த் கிஷோருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளது பற்றி...
பிகார் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரசாந்த் கிஷோருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் மஞ்சள்பூர், மத்தியப் பிரதேசத்தின் ததியா, பிகாரின் பங்கிப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், 64,117 வாக்குகளுடன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரைவிட சுமார் 19,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
Advertisement
Advertisement
பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்து தெரிவித்து மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பங்கிப்பூர் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்துகள். ஜன் சுராஜ் கட்சியின் முதல் தேர்தல் வெற்றி. பங்கிப்பூர் தொகுதி மக்களுக்கும் பிகார் மாநில மக்களுக்கும் அவர் ஆற்றும் சேவையில் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “பிகார் இடைத்தேர்தலில் தன்னுடைய வெற்றி என்பது பாஜக தலைமைக்கான செய்தி” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
DMK leader M.K. Stalin congratulated Prashant Kishor today on his victory in the Bihar by-election.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.