FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முன்னாள் ரௌடி - என்கவுண்டர் செய்யப்பட்ட அரசியல்வாதி ஆதிக் அகமது மகன் விபத்தில் பலி! கடைசியாக சொன்ன வார்த்தை

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் ரௌடியும் என்கவுண்டர் செய்யப்பட்ட அரசியல்வாதியுமான ஆதிக் அகமது மகன் விபத்தில் பலியானார்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:09 pm IST
சாலை விபத்து
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்ஸியில் நிகழ்ந்த சாலை விபத்தில், ரௌடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய மறைந்த ஆதிக் அகமது மகன் அபான் பலியானார்.

மிக வேகமாக வந்த கார், சாலைத் தடுப்பில் மோதியதில், கார் இருந்த அபான் மற்றும் அவரது நண்பர் சோனு இருவரும் பலியாகினர். பிரயாக்ராஜிலிருந்து ஜான்ஸி நோக்கி வந்து கொண்டிருந்த காரில் ஐந்து பேர் இருந்துள்ளனர்.

வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக இன்று காலை 10.30 மணிக்கு காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது.

Advertisement

Advertisement

விரைந்து சென்ற காவல்துறை, உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கூறுகையில், கார் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதிக் அகமதுவின் ஐந்து மகன்களில் அபான் இளைய மகனாவார். தற்போது இவரது இரண்டு மகன்கள் உத்தரப்பிரதேசத்தின் வெவ்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, ஆதிக் அகமது குடும்பத்தில், இவர்களது மூத்த மகன் ஆசாத் அகமது, அவரது சகோதரர் அஷ்ரஃப், ஆதிக் அகமது ஆகியோர் காவல்துறை என்கவுண்டர்களில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments