ஜார்க்கண்ட் போராட்டம்: அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் மீது மை வீசித் தாக்குதல்!
ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவுப் போராட்டத்தில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் மீது மை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...
ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு போராட்டத்தில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா மீது மை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி பேரணி செல்லத் திட்டமிட்டுள்ளதாக அம்மாநில மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வாணையம் மற்றும் பிற பணிகள் நியமனத்திற்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாகவும், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களும் கடந்த ஜூலை 25 ஆம் தேதி முதல் ராஞ்சியின் ஜெய்பால் சிங் முண்டா அரங்கத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
அவர்கள், 14-வது ஜார்க்கண்ட் பிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆட்சேர்ப்புத் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ அல்லது மாநிலத்திற்கு வெளியே ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவைக் கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக ராஞ்சி நகரில் பெய்துவரும் கனமழையும் பொருள்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராடி வரும் நிலையில், அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினரும் அவர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஆறு பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஜார்க்கண்ட் அரசுடனான எந்தப் பேச்சுவார்த்தைகளும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி அமைப்புகளான அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பிர்சா சௌக் அருகே பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் நேஹா போரா மீது மை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மை வீசித் தாக்குதல் நடத்தியவர் பாஜகவைச் சேர்ந்த என்று அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
A man threw ink at All India Students' Association president Neha Bora during a protest march towards the Jharkhand Assembly in Ranchi on Friday over alleged irregularities in recruitment exams in the state. The man, who accused Bora of being "anti-national", was detained by the police.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.